மக்களவையில் பேசிய சிதம்பரம் எம்.பி.யும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன், நாடு முழுவதும் எஸ்சி, எஸ்டி மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. ஆணவப் படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுப்பதற்கென தனிச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பட்டியல், பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் இருப்பது போல தனித்தனி புதிய அமைச்சகங்களை உருவாக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.