மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 82,100 புள்ளிகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இன்று (ஆகஸ்ட் 01) தொடக்க நேர வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 388 புள்ளிகள் உயர்ந்து 82,129 புள்ளிகளை தொட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 126 புள்ளிகள் உயர்வுடன் 81,868 புள்ளிகளுடனும் நிஃப்டி 60 புள்ளிகள் உயர்வுடன் 25,011 புள்ளிகளுடனும் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 15 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின.