ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயமாக தனித்துப் போட்டியிடுவோம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். திருச்சியில் நேற்று (டிச. 22) அளித்த பேட்டியில், "அமலாக்கத் துறை சோதனைக்குப் பயந்துதான் திமுக, அதிமுக கூட்டங்களில் பாஜகவுக்கு எதிராக கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றுவதில்லை. தமிழர்களின் அடையாளங்களை மறைத்துவிட்டு அனைத்து இடங்களுக்கும் கருணாநிதி பெயர் சூட்டப்படுகிறது” என்றார்.