அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரதா சாஹு ஆலோசனை

50பார்த்தது
அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் சத்யபிரதா சாஹு ஆலோசனை
மக்களவைத் தேர்தல் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அங்கீகரிக்கப்பட்டுள்ள 10 அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தேமுதிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி