கதை- திரைக்கதை- டைரக்‌ஷன் பாஜக.. கள்ளக்கூட்டணியில் இபிஎஸ்

74பார்த்தது
கதை- திரைக்கதை- டைரக்‌ஷன் பாஜக.. கள்ளக்கூட்டணியில் இபிஎஸ்
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள ஸ்டாலின் அதிமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, கொடநாடு கொலை, கொள்ளை, பொள்ளாச்சி பாலியல் வன்முறை என்று பழனிசாமி ஆட்சியின் அவலங்கள் என்று நீண்ட பட்டியலே போடலாம். ஊழல் கறை படிந்த அவரின் கரங்களை காப்பாற்றிக் கொள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்து, பாஜக தமிழகத்துக்கு செய்த துரோகங்களுக்கு துணை நின்று, அதற்கு லாலி பாடியவர் பழனிசாமி. இப்போது அதே பாஜகவின் கதை, திரைக்கதை, வசனம், டைரக்‌ஷனில் கள்ளக் கூட்டணி நாடகத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார் என்று தெரிவித்தார்.