சேலம் அருகே விபத்தில் தொழிலாளி பலி

62பார்த்தது
சேலம் அருகே விபத்தில் தொழிலாளி பலி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே காட்டுவேப்பிலைபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 39). கூலி தொழிலாளி. இவர் தனது மொபைல்பேசியில்மொபைல் போனில் சேசஞ்சாவடி சர்வீஸ் சாலையில் சென்றபோது முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் மோதி கீழே விழுந்தார். இதில் முருகன் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே முருகன் பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை ஓட்டிய பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் (21) என்பவர் லேசான காயம் அடைந்தார். விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி