தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஏற்காட்டில் கொடியேற்று விழா நடந்தது. மாவட்ட தலைவர் பார்த்திபன் கலந்து கொண்டு 2 இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைத்தார். முன்னதாக கட்சி நிர்வாகிகள் படகு இல்லத்தில் இருந்து ஒண்டிக்கடை ரவுண்டானா வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். பின்னர் ஒண்டிக்கடையில் உள்ள தனியார் விடுதியில் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மற்றும் மாநாட்டுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஏற்காடு சட்டசபை தொகுதி பொறுப்பாளர் வேதநாயகம், ஒன்றிய பொறுப்பாளர் பிரவீன்ஜோஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.