கைக்குழந்தைகளுடன் பெண்கள் சாலை மறியல்

3971பார்த்தது
கைக்குழந்தைகளுடன் பெண்கள் சாலை மறியல்
சேலம் மாவட்டம் வாழப்பாடி 15-வது வார்டு காமராஜர் நகர் ஆத்துமேடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் பேரூ ராட்சி சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண் கள் வாழப்பாடியில் இருந்து தம்மம்பட்டி செல்லும் பிரதான சாலையில் மரம், பலகைகளை போட்டு சாலையில் அமர்ந்து கைக்குழந்தைகளுடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், பேரூராட்சி தலைவர் கவிதா. செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாக் கடை கால்வாய் வசதி ஏற்படுத்தவும், தேங்கிய கழிவுநீரை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பர பரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி