சேலம் மாவட்டம் ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் கலெக்டர் பிருந்தா தேவி தலைமையில் நேற்று நடந்தது. இந்த முகாமில் சாலை வசதி, இலவச வீட்டு மனை பட்டா, ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு பொதுமக்கள் கலெக்டரிடம் மனுக்களை வழங்கினர். முகாமில் வருவாய் துறை சார்பில் இந்து மலையாளி ஜாதி சான்று, புதிய குடும்ப அட்டை, வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் 153 பயனாளிகளுக்கு ரூ. 2, 148 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இது குறித்து கலெக்டர் பிருந்தா தேவி கூறும் போது மலைவாழ் மக்களின் மேம்பாட்டு தின மாவட்ட நிர்வாகத்தால் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகின்ற நலத்திட்ட உதவிகளை மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வில் மென்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என கூறினார்.