மதவாத
பாஜக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவதே தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நோக்கம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில்
திமுக விடம் ஒரு தொகுதி கேட்கப் போவதாக வேல்முருகன் அறிவிப்பு.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ஏற்காட்டில் நடைபெற்றது. கட்சியின் வளர்ச்சிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் ஒரு நாடாளுமன்ற தொகுதியை ஒதுக்கி தர வலியுறுத்தி
விரைவில்
திமுக தலைவர் மு க ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வலியுறுத்தவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
மேலும் இது குறித்து தலைவர் வேல்முருகன் கூறும் போது
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்
கடலூரில் இயங்கி வரும் சிப்காடில் 50க்கும் மேற்பட்ட கெமிக்கல் நிறுவனங்களும் பல சாய தொழில் நிறுவனங்களும் இயங்கி வந்தது, இதன் தொடர்ச்சியான இயக்குதலின் காரணமாக கடலூர் மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடம் என சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாடாளுமன்றத் தேர்தலில்
எங்கள் கட்சி நிலைப்பாடு குறித்து மாநில பொதுக்குழு கூடி முடிவெடுப்போம் எனவும் தெரிவித்தார்.