தொடர் விடுமுறை முடிவு: பஸ்ஸ்டாண்டில் பயணிகள் குவிந்தனர்

79பார்த்தது
தொடர் விடுமுறை முடிவு: பஸ்ஸ்டாண்டில் பயணிகள் குவிந்தனர்
தொடர் விடுமுறை முடிவடைந்ததையொட்டி வெளியூர்களுக்கு செல்வதற்காக சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் குவிந்தனர். தொடர் விடுமுறை தமிழகத்தில் கடந்த 23-ந்தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. அதே போன்று டிசம்பர் மாதம் 30, 31-ந்தேதி (சனி, ஞாயிறு) மற்றும் ஆங்கில புத்தாண்டு என தொடர்ந்து 3 நாட்கள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்த வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரியில் படிப்பவர்கள் ஊரான சேலத்திற்கு வந்திருந்தனர். இந்த நிலையில் தொடர் விடுமுறை நேற்று முடிந்தது. அதே போன்று அரையாண்டு தேர்வு முடிந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதனால் விடுமுறையில் சேலத்திற்கு வந்த பலர் நேற்று வேலை பார்க்கும் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்ல ஏராளமான பயணிகள் புதிய பஸ் நிலையத்தில் குவிந்தனர். அதன்படி சென்னை, மதுரை, நெல்லை, நாகர்கோவில் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு பயணிகள் வருகைக்கு ஏற்ப போக்குவரத்து அதிகாரிகள் தேவையான பஸ்களை வரவழைத்து அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி