டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கத்தினர் புத்தாண்டு வாழ்த்து

80பார்த்தது
டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கத்தினர் புத்தாண்டு வாழ்த்து
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று சேலம் மாவட்ட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர் சங்கம் சார்பில் வெக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து சங்க மாவட்ட தலைவர் மகேந்திரன், மாவட்ட பொதுச்செயலாளர் தேவராஜன், மாவட்ட பொருளாளர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் சேலம் மாவட்ட இரண்டு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் செல்வத்தை நேரில் சந்தித்து இனிப்பு வழங்கியும், சங்க 2024-ம் ஆண்டு காலண்டர் வழங்கியும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் குகை புலிகுத்தி தெரு, பழைய பஸ்நிலையம் பகுதியில் உள்ள இரு சக்கர வாகன உதிரிபாகங்கள் விற்பனையாளர்களை சந்தித்து அவர்களுக்கு சங்க காலண்டர் மற்றும் கேக் வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், கொண்டலாம்பட்டி பகுதி நிர்வாகி சக்திவேல், தினேஷ்குமார், சண்முகவேல் உள்பட டூவீலர் மெக்கானிக் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி