பெண்கள் சாலைமறியல் எதிரொலி: குடிநீர் வினியோகம்

77பார்த்தது
பெண்கள் சாலைமறியல் எதிரொலி: குடிநீர் வினியோகம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சந்திரப்பிள்ளைவலசு கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கடந்த 11-ந் தேதி குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.
இந்நிலையில், சந்திரப்பிள்ளைவலசு ஊராட்சி நிர்வாகம், வாழப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளனர். இதையடுத்து ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் பெண்கள் தங்களது வீடுகளில் இருந்து குடங்களை எடுத்து வந்து தங்களுக்கு தேவையான தண்ணீரை பிடித்து சென்றனர். இனிமேல் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊராட்சியில் நிலவிய குடிநீர் பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு ஊர்பொதுமக்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி