சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் வைத்தியகவுண்டம் புதூர், வடகத்தம்பட்டி, வீராகவுண்டனூர், பெரிய கிருஷ்ணாபுரம், தமையனூர், மேற்கு ராஜா பாளையம், சின்ன கிருஷ்ணாபுரம், ஏ. கரடிப்பட்டி, புத்திரகவுண்டம் பாளையம் உள்ளிட்ட பகுதி பொதுமக்களுக்காக வைத்தியகவுண்டம் புதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட நுகர்பொருள் வணிப கழக துணை கலெக்டர் ஈஸ்வரி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். தெற்கு ஒன்றிய தி. மு. க. செயலாளர் தங்க மருதமுத்து வரவேற்றார். மத்திய தி. மு. க. ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் முத்துலிங்கம், பேரூராட்சி செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மாணிக்கவாசகம், வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, புத்திரகவுண்டம்பாளையம் சிவகாமி முனிராஜ், பெரிய கிருஷ்ணாபுரம் துணைத்தலைவர் மணிகண்டன் மற்றும் 15 துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுடைய மனுக்களை பெற்றனர். உடனே தீர்வு காண வேண்டிய மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டது.