வாழப்பாடி: பெண் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

69பார்த்தது
வாழப்பாடி: பெண் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த ஆலடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பாயி. இவர், கடந்த 2015-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக புழுதிக்குட்டை பகுதியை சேர்ந்த மாதேஷ் (வயது 43) என்பவர் மீது காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அவர் இந்த வழக்கு விசாரணைக்கு கடந்த ஆண்டு முதல் சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார்.

இதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மாதேஷ் கர்நாடகாவில் பதுங்கி இருப்பதாக காரிப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் கர்நாடகாவில் உள்ள திப்பூர் பகுதியில் தலைமறைவாக இருந்த மாதேசை மடக்கி பிடித்து அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் காரிப்பட்டிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி