சேலத்தில் ஆசிட் குடித்து வாலிபர் சாவு

53பார்த்தது
சேலத்தில் ஆசிட் குடித்து வாலிபர் சாவு
சேலம் ஆண்டிப்பட்டி பனங்காடு கோவில் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர்
பாலு. இவரது மகன் ராம்குமார் (வயது31). இவர் வெள்ளி தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் ராம்குமார் நேற்று முன்தினம் வீட்டில் வெள்ளிக்கு பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு திருவாகவுண்டனூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி