அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் மயக்க மருந்தியல் நிகழ்ச்சி

55பார்த்தது
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் மயக்க மருந்தியல் நிகழ்ச்சி
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மயக்க மருந்தியல் பிரிவின் மூலம் தங்களின்  தொழில்துறை சார்ந்த சமீபத்திய வளர்ச்சி குறித்த திறன் மேம்பாட்டு விரிவுரை நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தின் வேந்தர் கணேசன் வழிகாட்டுதலின்படி மாணவர்களுக்காக கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு துறையின் முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்புரை வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக சேலம் ஸ்ரீ கோகுல் மருத்துவமனையின் மயக்க மருந்தியல் பிரிவின் துறை தலைவரும், மருத்துவ ஆலோசகருமான சுப்பிரமணியன் பங்கேற்று மயக்க மருந்தியல் மற்றும் அறுவை அரங்க பிரிவில் சமீபத்திய வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இதில் துறையின் மயக்க மருந்தியல் மற்றும் அறுவை அரங்க பிரிவு மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதற்கான அனைத்து ஏற்பாட்டியினையும் துறையின் மயக்க மருந்தியல் பிரிவின் பொறுப்பாளர் உமா மகேஸ்வரி, அறுவை அரங்க பிரிவு பொறுப்பாளர் விக்னேஸ்வரா மற்றும் முத்தமிழ், திவ்யா ஆகியோர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி