சேலம் நெடுஞ்சாலை கோட்டத்தில் சாலை பணிகளை அதிகாரி ஆய்வு

66பார்த்தது
சேலம் நெடுஞ்சாலை கோட்டத்தில் சாலை பணிகளை அதிகாரி ஆய்வு
சேலம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில் ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் பல்வேறு சாலை பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில் நெத்திமேடு முதல் கொண்டலாம்பட்டி ரவுண்டானா வரை ரூ.1 கோடி 40 லட்சத்தில் சாலை மேம்பாடு செய்தல் பணி, ஜாகீர் அம்மாபாளையம்- தாரமங்கலம் சாலையில் புதுரோடு சந்திப்பில் ரூ.5 கோடியில் ரவுண்டானா, சர்வீஸ் சாலை அமைக்கும் பணி ஆகிய முடிவுற்ற பணிகளை சேலம் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வில் சாலையின் தரம், தடிமன் சரிபார்க்கப்பட்டது. 

ஆய்வின்போது புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலைகளில் விபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளைக்கோடு, சாலை உபகரணங்களை உடனடியாக பொருத்த அறிவுறுத்தினார். மேலும் நடப்பாண்டில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது சேலம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புக் கோட்ட பொறியாளர் முத்துகுமரன், உதவி கோட்ட பொறியாளர் சந்தோஷ்குமார், உதவி பொறியாளர் ஞானசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி