புத்தாண்டையொட்டி தமிழ் எழுத்துக்களால் வரையப்பட்ட கோலம்

54பார்த்தது
புத்தாண்டையொட்டி தமிழ் எழுத்துக்களால் வரையப்பட்ட கோலம்
தமிழகம் முழுவதும் நேற்று தமிழ் புத்தாண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே பெரமனூர் நத்தமேடு கிராமத்தில் ஓய்வு பெற்ற தமிழாசிரியர் ராமமூர்த்தி என்பவரின் வீட்டில் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வீட்டின் முன்பு தமிழ் எழுத்துக்கள் (உயிர் எழுத்துக்கள் 12, ஆயுத எழுத்து 1) மூலம் கோலம் வரையப்பட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு இருந்தது அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்புடைய செய்தி