இடங்கணசாலை பகுதியில், குடிநீர் கேட்டுபொதுமக்கள் சாலைமறியல்

60பார்த்தது
இடங்கணசாலை பகுதியில், குடிநீர் கேட்டுபொதுமக்கள் சாலைமறியல்
சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி பகுதியான மெய்யனூரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் சீராக நடைபெறவில்லை என்று அந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் புகார் தெரிவித்து வந்தனர். குறிப்பாக அந்த பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் போதிய அளவு தண்ணீர் ஏற்றி வினியோகம் செய்யவில்லை என்று அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் நேற்று காலையில் மெய்யனூர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் காலிக்குடங்களுடன் சின்னப்பம்பட்டி-இளம்பிள்ளை சாலைக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் மகுடஞ்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு, ஆனந்த், கவிப்பிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மெய்யனூர் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் ஏற்றி சீரான முறையில் குடிநீர் வழங்க அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த மறியல் காரணமாக சின்னப்பம்பட்டி-இளம்பிள்ளை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி