கஞ்சா வியாபாரி 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது

61பார்த்தது
கஞ்சா வியாபாரி 18 ஆண்டுகளுக்கு பிறகு கைது
தேனி மாவட்டம் ஜி. உசிலம்பட்டி அருகே உள்ள மேக்கிலார்பட்டியை சேர்ந்தவர் பழனி (வயது 56). இவர் கடந்த 2006-ம் ஆண்டில் சேலத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்த அவர் கடந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் 13-ந்தேதி ஜாமீனில் வெளியில் வந்தார். அதன்பிறகு சிறைக்கு செல்லாமல் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் கிடைக்கவில்லை.

இதையடுத்து தலைமறைவானவரை பிடிக்க, சேலம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்கு மார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், கஞ்சா வியாபாரியை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் தேனி மாவட்டத்தில் அவரது வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் நேற்று(செப்.2) அங்கு விரைந்து சென்று வீட்டில் பதுங்கி இருந்த பழனியை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கஞ்சா வியாபா ரியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி