இளம்பிள்ளை பேக்கரியில் காலாவதியான கேக் , பொதுமக்கள் புகார்.

550பார்த்தது
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, காடையாம்பட்டி பிரிவு சாலையில் உள்ள ஒரு பேக்கரியில் காலாவதியான கேக் விற்பனை செய்துள்ளனர். இதனை இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த ஒருவர் பிறந்தநாள் விழாவுக்காக கேக் அந்த கடையில் கேக் வாங்கிச் சென்றுள்ளார். அதனை வீட்டில் கேக் வெட்டி சாப்பிடும் போது ஒரு புளிச்ச வாசனை வந்ததால் அதனை பெரியவர்கள் யாரும் சாப்பிடவில்லை. பிறந்தநாள் விழா காணும் குழந்தை மட்டும் சாப்பிட்டுள்ளது. உடனடியாக அந்த குழந்தையை தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று கொண்டனர். இது குறித்த பொதுமக்கள் அந்த பேக்கரி ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கடைக்காரர் கேக் வாங்கி சென்றவர் வீட்டிற்கு சென்று இனிமேல் இந்த மாதிரி நடக்காது‌ என மன்னிப்பு கேட்டுள்ளார். பெங்களூரில் காலாவதியான கேக் சாப்பிட்ட பெண் குழந்தை இறந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. ஆகவே உணவு பாதுகாப்புத் துறையினர் தங்களது கடமையை செய்யாமல், கடை உரிமையாளர்களிடம் மாதந்தோறும் ஒரு கணிசமான தொகையினை பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். எந்த ஒரு கடையிலும் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்யப்படாமல் இருக்க உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் கடை உரிமையாளர்களிடம் அதிரடி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் ‌.

தொடர்புடைய செய்தி