சேலம் கோட்டை மைதானத்தில் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ஏ. ஆர். பி பாஸ்கர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு கொண்டுவந்த நிதி பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டிக்கிறோம் என்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.