இளம்பிள்ளையில் காலாவதியான கேக் விற்ற பேக்கரி மூடல்

83பார்த்தது
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, காடையாம்பட்டி பிரிவு பகுதியில் இளம்பிள்ளையை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார். இந்த  பேக்கரியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கெட்டுப்போன கேக் விற்பனை செய்யப்பட்டது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன்  உத்தரவு படி பேக்கரியில் வீரபாண்டி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஆரோக்கிய பிரபு ஆய்வு மேற்கொண்டத்தில் ஐஸ் கேக் தயார் செய்து வைக்கப்படும் குளிர் சாதனம் முறையாக பராமரிப்பின்றி வெப்பநிலை பயன்பாட்டில் இல்லாதது கண்டறியப்பட்டது.

அது தொடர்த்து அங்கு தயார் செய்யப்பட்டிருந்த கேக், கிரீம், ஐஸ் கேக் உள்ளிட்டவை மாதிரி எடுத்து உணவு பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டடுள்ளது. கடையின் உள் கட்டமைப்பு, உணவு சேமிப்பு அரை, பூச்சி தடுப்பு முறைகள், குடிநீர் ஆய்வறிக்கை, ஆகியவற்றின் குறைபாடுகள் குறித்து விளக்கம் கேட்டு உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்ட பிரிவு படி கடை உரிமையாளருக்கு அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.  

அங்கு தயாரிப்பு தேதி இல்லாத உணவு பொருள்கள் பிஸ்கட், பிரட், தேங்காய் பிரட், பீன்ஸ் பிஸ்கட் போன்றவைகள் 5.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பயன்படுத்தி சூடான உணவு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு உரிமையாளர்  கோவிந்தசாமிக்கு ரூ. 2000 அபராதம் விதிக்கபட்டுள்ளது. பின்னர் பேக்கரியும் தற்காலிகமாக மூடப்பட்டது.

தொடர்புடைய செய்தி