30க்கும் மேற்பட்ட ஆடுகள் திருட்டு

1941பார்த்தது
30க்கும் மேற்பட்ட ஆடுகள் திருட்டு
ஆடுகளை குறிவைத்து திருடும் மர்ம கும்பலால், விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

தலைவாசல், சிறுவாச்சூர், வேப்பநத்தம், வரகூர், ஊனத்தூர், பாரதி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களில், ஆடுகள் திருட்டு போகும் சம்பவங்கள், தொடர்ந்து நடந்து வருகின்றன. கடந்த மாதத்தில் மட்டும், 30க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போய்விட்டன. குறிப்பாக, மேய்ச்சலுக்கு விடப்படும் ஆடுகளை, பகலிலேயே, மர்ம நபர்கள் திருடிவிடுகின்றனர்.

ஏற்கனவே, ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கால்நடைகள் திருட்டு, விவசாயிகள் இடையே, பீதியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, ஆட்டு இறைச்சி கிலோ, 700 ரூபாய்க்கு மேல் விற்பதால், திருடர்கள், ஆடுகளை திருடி விற்கின்றனர். இதனால், மர்ம கும்பலை பிடிக்க, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆடு வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி