கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு

1665பார்த்தது
கிணற்றில் விழுந்தவர் உயிருடன் மீட்பு
கொளத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்தவரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது தோட்டத்தில் 70 அடி கிணறு வறண்டு உள்ளது. நேற்று மாலை அவரது கோழி வறண்டு உள்ள கிணற்றின் செடியில் மாட்டிக்கொண்டது.

கோழியை காப்பாற்ற பழனிச்சாமி கிணற்றில் இறங்கிய போது தவறி கீழே விழுந்துள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில் மீட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பழனிச்சாமி உயிருடன் மீட்டனர்.

தொடர்புடைய செய்தி