சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா முளைப்பலிகை ஊர்வலம்

63பார்த்தது
சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா முளைப்பலிகை ஊர்வலம்
சேலம் மாவட்டம், சங்ககிரி அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழாவினையொட்டி பெண்கள் கும்மி அடித்து முளைப்பாலிகை ஊர்வலம் சங்ககிரி முக்கிய வீதிகளின் நடைபெற்றது.

அருள்மிகு சௌந்தரநாயகி உடனமர் சோமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா ஜூன் 3ம் தேதி திங்கள்கிழமை முகூர்த்தகால் நடும் வைபவத்துடன் தொடங்கியது. அதனையடுத்து ஜூலை 1 ஆம் தேதி முளைப்பாலிகை பதியம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைடுத்து வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு 4ம் கட்ட வேள்வி பூஜைகளும், காலை 8. 30 மணிக்கு மேல் 10. 15 மணிக்குள் கோபுரகலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் கும்பாபிஷேக விழா நடைபெறுவதையொட்டி பதியமிட்ட முளைப்பாலிகையை பெண்கள் சங்ககிரி, வி. என். பாளையம் மாரியம்மன் கோயில் வளாகத்திலிருந்து புறப்பட்டு

பழைமாரியம்மன் கோயில் வழியாக பவானி பிரதானசாலை, தெலுங்கர்தெரு தில்லைவிநாயகர் கோயில், பழைய எடப்பாடி சாலை வழியாக கோயிலை அடைந்தது. இதில் வி. என். பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் கும்பாபிஷேக விழாவிற்காக ராமேஸ்வரத்திலிருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி