சோமேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா தீர்த்தக்குட ஊர்வலம்

52பார்த்தது
சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட மலைக்கோட்டை அடிவாரத்தில் பிரமாண்டமாக அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்து சமய அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அருள்மிகு செளந்திரநாயகி உடனமர் அருள்மிகு சோமேஸ்வரர் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு

சங்ககிரியிலிருந்து பக்தர்கள் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறைக்கு சென்று புனித நீராடி தீர்த்தம் எடுத்துக் கொண்டு கேரள செண்டை மேளம் முழங்க யானை , குதிரை, காளை மாடுகளுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்

சிவன், பார்வதி, முருகன், விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சுவாமிகளின் வேடமிட்டு இசைக்கேற்றவாறு நடனம் ஆடியபடி தீர்த்தக்குடங்களுடன் சேலம் பிரதான சாலை, சங்ககிரி பழைய பேருந்து நிலையம், புதிய எடப்பாடி சாலை வழியாக ஊர்வலமாக சென்று சோமேஸ்வரர் ஆலயத்தை வந்து அடைந்தனர்.
இதனைதொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் கும்பாபிஷேக விழாவிற்காக நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும்மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற இந்நிகழ்வு அனைவரையும் வியக்க வைத்தது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி