விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கலாசார நாட்டியாஞ்சலி விழா

562பார்த்தது
விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கலாசார நாட்டியாஞ்சலி விழா
சங்ககிரி விவேகானந்தா கலை, அறிவியல் மகளிர் கல்லூரி வளாக அரங்கில் 2024-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கலாசார நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது. விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் தாளாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். சங்ககிரி கல்வி நிறுவனங்களின் செயல் அதிகாரி வரதராஜூ, திறன்மேம்பாட்டுதுறை இயக்குனர் குமாரவேல், கல்லூரி முதல்வர்கள் ஜோதிநாயர், ஆனந்தகுமார், ஆரோக்கியசாமி, அழகுசுந்தரம், நர்சிங் கல்லூரி துணை முதல்வர் மாலதி, ஐ. கியூ. ஏ. சி இயக்குனர் சுரேஷ்குமார், டெக்ஸ்டைல் பேஷன் மற்றும் காஸ்டியும் டிசைனிங் பேஷன் துறைகளின் டீன் ரவிசங்கர், அட்மிஷன் அதிகாரி தமிழ்ச்செல்வன், வேலைவாய்ப்பு அதிகாரி அருண்பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கல்லூரி மாணவிகள் 50-க்கும் மேற்பட்ட இந்திய கலாசார பாரம்பரிய நாட்டியங்கள், மேலைநாட்டு கலாசார நடனங்களை அரங்கேற்றினர். இதில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் பரிசு, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து 24 கிலோ பிரமாண்ட கேக் வெட்டி 4 ஆயிரம் மாணவிகள், பேராசிரியர்கள், அலுவலக, போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் அனைத்து துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து 2024-ம் ஆண்டில் பல்கலைக்கழக ரேங்க், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வெற்றி பெற மாணவிகள் உறுதி ஏற்றனர்.

தொடர்புடைய செய்தி