அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

75பார்த்தது
அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தலைமையில் இன்று நடைபெற்றது. 'விவசாயிகள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் மீது 10 முதல் 15 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் பதிலளிக்க வேண்டும்' என்று அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் உடன், மாவட்ட வருவாய் அலுவலர் மரு. பெ. மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி ஆக்ரிதி சேத்தி, இ. ஆ. ப. , வேளாண்மை இணை இயக்குநர் திரு. ச. சிங்காரம், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் திரு. ப. இரவிக்குமார், கால்நடை பராமரிப்புத் துறையின் மண்டல இணை இயக்குநர் டாக்டர்என். பாரதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) திருமதி ந. நீலாம்பாள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள், விவசாயிகள் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி