சங்ககிரியில் மூத்த வழக்கறிஞருக்கு பாராட்டு விழா

56பார்த்தது
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடர்ந்து 60 ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த வழக்கறிஞர் ராமச்சாமிக்கு பாராட்டி வைர விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

அப்போது பேசிய அவர் தான் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும் போது மும்பை குண்டு வெடிப்பு , வாக்கு இந்திரத்தில் நோட்டா உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியதாகவும் கூறினார்.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் பேசுகையில் இளம் வழக்குரைஞர்கள் மூத்த வழக்குரைஞர்களிடம் அனுபவம், தொழிலை சிறந்த முறையில் கற்றுக்கொள்ள வேண்டும். வழக்குரைஞர்கள் கடினமாக உழைத்து தொழிலை கண்ணியம், மரியாதை, உண்மையாக மேற்கொள்ள வேண்டும். சமுதாயத்தில் ஒரு பொறுப்பள்ளவர்களாக பணியாற்ற வேண்டும் எனவும் பேசினார்.

அப்போது சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கண்ணம்மாள், சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜோதிராமன், சேலம் மாவட்ட நீதிபதி சுமதி, சேலம் மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்ற நீதிபதி நம்பிராஜன், சங்ககிரி சார்பு நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் உட்பட நீதிபதிகள் வழக்கறிஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி