தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம், சேலம் மாவட்ட கைப்பந்து கழகம், சேலம் சிறைத்துறை ஆகியவை இணைந்து மாநில அளவில் மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து பயிற்சி முகாமை, சேலம் சிறை வளாகத்தில் உள்ள மைதானத்தில் நடத்தி வருகின்றன. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். இதில் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல், துணை செயலாளர் ஹரிகிருஷ்ணன், பயிற்சியாளர் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.