விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தர் பிறந்தநாள் விழா

67பார்த்தது
விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தர் பிறந்தநாள் விழா
சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தர் கணேசன் பிறந்தநாளையொட்டி விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் மாணவ சங்க அமைப்பு, நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு ஆகியவற்றை சேர்ந்த மாணவர்கள் மூலம் பல்வேறு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் உள்ள கடமான் தத்தெடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் ஷஷாங் ரவி சிறப்பு விருந்தினராகவும், சிறப்பு அழைப்பாளராக உதவி வன பாதுகாவலர் செல்வகுமாரும் பங்கேற்றனர். அவர்களின் முன்னிலையில் கடமான் தத்தெடுக்கப்பட்டு அவற்றிற்கான பராமரிப்புக்கு காசோலையை டீன் டாக்டர் செந்தில்குமார் வழங்கினார். தொடர்ந்து வீரபாண்டி தொகுதி சின்னசீரகாபாடி அரசு உயர்நிலைப்பள்ளி நூலகத்திற்கு புத்தக அலமாரியும், புத்தகங்களும் வழங்கப்பட்டன. இதனை பள்ளியின் தலைமை ஆசிரியை லலிதா பெற்றுக்கொண்டார்். அடுத்ததாக வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவசர காலங்களில் பயன்படும் உபகரணங்கள் மாணவர்கள் சார்பில் வழங்கப்பட்டது. இதனை வீரபாண்டி வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் சக்திவேல் பெற்று கொண்டார்.
மேலும் மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி