சேலம் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 56 இன்ஸ்பெக்டர்கள் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு: -
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் எஸ். தங்கவேல், கருமலைக்கூடலுக்கும், அங்கு பணியாற்றி வந்த ஆர். முருகன், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், தலைவாசல் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், மேட்டூர் இன்ஸ்பெக்டர் அழகுராணி, ஆத்தூர் டவுனுக்கும், ஆத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் எம். செந்திலகுமார், மகுடஞ்சாவடிக்கும், நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி, கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சங்ககிரி இன்ஸ்பெக்டர் ரஞ்சனி, வீரகனூருக்கும், ஏற்காடு இன்ஸ்பெக்டர் ஓசூர் டவுனுக்கும், கல்லாவி இன்ஸ்பெக்டர் தமிழரசி, இரும்பாலை பொருளாதார குற்றப்பிரிவுக்கும், ஆத்தூர் பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, கொங்கணாபுரத்திற்கும்,
இதேபோல் 63 இன்ஸ்பெக்டர்கள் பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவுகளை சேலம் சரக டி. ஐ. ஜி. உமா பிறப்பித்துள்ளார்.