தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கூட்டம்

68பார்த்தது
தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு கூட்டம்
தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராமகவுண்டர், பொருளாளர் செல்வம், துணை செயலாளர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில தலைவர் கதிர்வேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், தமிழ்நாடு தொழிற்சங்க உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக பலராமன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் கண்ணன், மாவட்ட கவுரவ தலைவர் ராசப்பன், துணைத்தலைவர் ஆறுமுகம், துணை செயலாளர் கோவிந்தன், மகளிர் அணியை சேர்ந்த பிரமிளா, சங்கீதா உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு மாநில தலைவர் கதிர்வேல் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். கூட்டத்தில், நலவாரிய உறுப்பினர் பதிவுக்கு கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும், நலவாரிய இணையதளம் இ-சேவை மையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, பதிவு பெற்ற தொழிற்சங்களுக்கு நலவாரிய பதிவுக்கு தனி ஐ. டி. வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி