சேலம் சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் 95-வது விளையாட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் செபாஸ்டின் தலைமை தாங்கி வரவேற்று பேசினார். பள்ளி விளையாட்டு திடலில் சேலம் மறை மாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் தலைமை தாங்கி அணிகளை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து சேலம் மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம், சேலம் மறை மாவட்ட பொருளாளர் ஜேக்கப், பள்ளி தாளாளர் ஜோசப் லாசர் ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு பதக்கங்கள் அணிவித்து சான்றிதழ்கள் வழங்கினர்.
14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பச்சை அணியில் விமல் 13 புள்ளிகளும், 17 வயது பிரிவில் மஞ்சள் அணியில் சஞ்சய் 15 புள்ளிகளும், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் மஞ்சள் அணி கீர்த்தி பாபு 15 புள்ளிகளும் பெற்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் செபாஸ்டின், உதவி தலைமை ஆசிரியர் கிறிஸ்துராஜா ஆகியோர் தனிநபர் வெற்றி கோப்பை வழங்கினர். முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் வெங்கடாசலம் மாணவர்களுக்கு ரூ. 1000 பரிசு வழங்கினார். மஞ்சள்அணி வீரர்கள் 96 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கேசவன், சரவணன் ஆகியோர் கமலம் ஸ்டீல் சுழற்கோப்பையை வழங்கினர். முடிவில் உடற்கல்வி இயக்குனர் நல்லாசிரியர் ராபர்ட் நன்றி கூறினார்.