தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை

85பார்த்தது
தமிழ் புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை
தமிழ் புத்தாண்டையொட்டி சேலம் மரவனேரி அன்னை காளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் அழகாபுரத்தில் உள்ள சேலம் திருப்பதி எனப்படும் வெங்கடசாமி கோவிலில் நள்ளிரவில் பத்மாவதி தாயாருடன் பரந்தாமன் பழங்களின் நடுவே தோன்றி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.