கட்டிடத்தை வாடகைக்கு தருவதாக ரூ. 25 லட்சம் மோசடி

56பார்த்தது
கட்டிடத்தை வாடகைக்கு தருவதாக ரூ. 25 லட்சம் மோசடி
சங்ககிரியை சேர்ந்தவர் செந்தில்முருகன். இவர் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். அதில் சேலம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருக்கு சொந்தமான கட்டிடம் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் பகுதியில் உள்ளது. அந்த கட்டிடத்தை மாதம் ரூ. 50 ஆயிரம் வாடகைக்கு தருவதாக கூறி என்னிடம் முன் பணமாக ரூ. 25 லட்சம் பெற்றுக்கொண்டார். ஆனால் அந்த கட்டிடத்தை எனக்கு வாடகைக்கு தராமல் வேறு ஒருவருக்கு விற்பனை செய்து விட்டதாக தெரிகிறது. எனவே நான் கொடுத்த ரூ. 25 லட்சத்தை திரும்ப பெற்று தரும்படி கேட்டேன். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து, ரூ. 25 லட்சத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மனுவின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்‌.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி