சேலத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை

57பார்த்தது
சேலத்தில் தூக்கிட்டு முதியவர் தற்கொலை
சேலம் கன்னங்குறிச்சி பஜனைமடத் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 80). தச்சு தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் இல்லாததால் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணிக்கம் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் விரைந்து வந்து மாணிக்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாணிக்கம் தற்கொலை செய்து ஓரிரு நாள் ஆகி இருக்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி