கடனை அடைப்பதற்கு வீட்டை விற்க தாய் மறுப்பு: மகன் மாயம்

77பார்த்தது
கடனை அடைப்பதற்கு வீட்டை விற்க தாய் மறுப்பு: மகன் மாயம்
சேலம் அழகாபுரம் தாதகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி(48). அந்த பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவர் தொழில் ரீதியாக 20 லட்சம் கடன் வாங்கினார். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனை அடைப்பதற்காக தனது தாயிடம் வீட்டை விற்று விடலாம் என மூர்த்தி தெரிவித்தார். ஆனால், அதற்கு அவரது தாய் மறுப்பு தெரிவித்து விட்டார். இதனால் விரக்தியில் இருந்து வந்த மூர்த்தி, கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர், அவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை. அவரை குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இதுபற்றி அவரது மகன் மனோஜ்குமார், அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :