மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடங்கி வைத்த எம்எல்ஏ, மேயர்

76பார்த்தது
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடங்கி வைத்த எம்எல்ஏ, மேயர்
சேலம் மாநகராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி 56-வது வார்டுக்குட்பட்ட கருங்கல்பட்டி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு கவுன்சிலர் சரவணன் வரவேற்று பேசினார். வக்கீல் ராஜேந்திரன் எம். எல். ஏ. , மேயர் ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து நகராட்சி நிர்வாகம், வருவாய், மாற்றுத்திறனாளிகள், சமூக நலத்துறை, காவல் துறை உள்ளிட்ட 13 துறைகளுக்கு தனித்தனியே அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. இதில் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, மின் இணைப்பு பெயர் மாற்றம், முதியோர் உதவித்தொகை என 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் அசோகன், வார்டு செயலாளர்கள் ஞானசேகர், ஜீவானந்தம், சீனிவாசன், முருகேஷ், கோபால், பகுதி துணை செயலாளர் ராஜசேகர், முன்னாள் கவுன்சிலர் சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :