மினி பேருந்து அரசு பஸ் மீது மோதி விபத்து 13 பேர் படுகாயம்

4689பார்த்தது
நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை இயங்கி வருகிறது. இந்த நூற்பாறிலிருந்து நேற்றிரவு பணிகளை முடித்துவிட்டு நூற்பாளைக்கு சொந்தமான மினி பேருந்தில் ஓட்டுனர் முருகேசன் என்பவர் 20 பெண்களை ஏற்றிக்கொண்டு அவர்களது சொந்த ஊரான சின்னப்பம்பட்டி, தாரமங்கலம், பகுதிகளில் விட்டு செல்வதற்காக, சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள ஒருக்காமலை பகுதியில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது அரசு பேருந்து ஓமலூரிலிருந்து 50 பயணிகளை ஏற்றிக் கொண்டு ஈரோட்டை நோக்கி எதிரே வந்து கொண்டிருந்தபோது தனியார் நூற்பாலை மினி பேருந்து எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பேருந்து மற்றும் முன்னாள் சென்ற லாரியின் மீதும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில்

மினி பேருந்து ஓட்டுநர் மற்றும் தனியார் நூர்பாளை மினி பேருந்தில் சென்ற 11 பெண்கள் மற்றும் அரசு பேருந்தில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 12 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.மேலும் அரசு பேருந்து மற்றும் மினி பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த சங்ககிரி போலீசார் படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி