சேலம் நெத்திமேடு அகரம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது49). இவர் லீ பஜாரில் உள்ள மளிகை கடையில் கேசியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில்
செந்தில்குமார் அங்குள்ள தகரம் மீது கால் வைத்தார். அது உடைந்து 25 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.