கலைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு

63பார்த்தது
கலைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு
ஆக்சிஸ் வங்கி சார்பில் பான் இந்தியா போட்டி என்ற தலைப்பில் அகில இந்திய அளவில் ஸ்பிளாஷ் கலை மற்றும் கைவினைப்போட்டி நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 7 முதல் 10 வயதிற்குட்ட பிரிவில் சேலம் செந்தில் பப்ளிக் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவி பி. யாஷ்வி முதல் பரிசு பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு விருது வழங்கும் விழா செந்தில் பப்ளிக்பள்ளி கலையரங்கில் நடைபெற்றது. ஆக்சிஸ் வங்கி கோவை முதுநிலை துணைத்தலைவர் வினோத்குமார், சேலம் தலைவர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற மாணவி யாஷ்விக்கு ரூ. 1 லட்சத்திற்கான காசோலை வழங்கி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் பள்ளி முதல்வர் மனோகரன், செந்தில் குழும பள்ளிகள் தலைவர் செந்தில் சி. கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை கந்தசாமி, செயலாளர் தனசேகர், தாளாளர் ஸ்ரீமதி தீப்திதனசேகர், தலைமை நிர்வாக அலுவலர் சுந்தரேசன், முதன்மை முதல்வர் சி. ஸ்ரீனிவாசன், முதல்வர் மனோகரன், துணை முதல்வர் நளினி, செந்தில் பப்ளிக் பள்ளி முதல்வர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி