பாமக வேட்பாளர் அண்ணாதுரைக்கு தீவிர வாக்கு சேகரிப்பு

60பார்த்தது
பாமக வேட்பாளர் அண்ணாதுரைக்கு தீவிர வாக்கு சேகரிப்பு
சேலம் மேற்கு சட்டமன்ற
தொகுதிக்குட்பட்ட ஊராட்சி
பகுதிகளான கொண்டப்பநாயக்கன்பட்டியில் தொடங்கி செட்டிச்சாவடி, வெள்ளக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில்
சட்டமன்ற உறுப்பினர் அருள் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சேலம் பாராளுமன்ற வேட்பாளராக
போட்டியிடும் அண்ணாதுரைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது மக்களிடம் மூன்றாவது முறையாக
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தொடர மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அருள்
எம். எல். ஏ பேசும்போது தங்களின்
தேவைகளை அறிந்து குறைகளை தீர்த்து உங்களுக்கு ஒரு சேவகனாக, உண்மை ஊழியனாக இருப்பார் எனவே பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அண்ணாதுரைக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி