சேலம்: ஊழியர் விரோத போக்கை கண்டித்து சுகாதார ஆய்வாளர்கள் போராட்டம்

58பார்த்தது
சேலம்: ஊழியர் விரோத போக்கை கண்டித்து சுகாதார ஆய்வாளர்கள் போராட்டம்
சேலம் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் பணியாற்றும் உதவி இயக்குனர் சிவராமன் ஊழியர் விரோத போக்குடன் செயல்படுவதாகவும் அவர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதம் தோறும் நடைபெறும் சங்கங்களில் குறைதீர்ப்பு கூட்டங்களை மாவட்ட சுகாதார அலுவலர் முன்பாக நடத்தி கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். பொது சுகாதாரத்துறை இயக்குனர் வழிகாட்டுதல்களை மீறி மாவட்ட நிர்வாகத்தால் சுகாதார ஆய்வாளர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் மாற்றுப் பணி உத்தரவுகளை உடனடியாக ரத்து செய்திட வேண்டும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தலின்படி ஆய்வு கூட்டங்களை அலுவலக நேரத்திற்குள்ளாக நடத்தி முடித்திட வேண்டும், 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் அறிவித்த கொரோனா ஊக்கத்தொகை விடுபட்ட அனைவருக்கும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை சங்கத்தின் மாநில தலைவர் மணிவண்ணன் துவக்கி வைத்து பேசினார்.

தொடர்புடைய செய்தி