சேலத்தில் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் மற்றும் கன்ஸ்யூமர் வாய்ஸ் பவுண்டேசன் சார்பில் மறைந்த ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அமைப்புகளின் நிறுவனர் பூபதி தலைமை தாங்கினார். சேலம் பவர் கிராண்ட் ரோட்டரி தலைவர் மாதேஸ்வரன், செயலாளர் பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டவுன் ரெயில் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அப்துல் கலாம் உருவப்படத்திற்கு ரோட்டரி முன்னாள் ஆளுநர் வேலாயுதம், ரவீந்திரன், கோபிநாத் ஆகியோர் மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து மத நல்லிணக்கம் காக்கவும், மனிதநேயம் பேணவும், உலக அமைதி வேண்டியும் உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள், வியாபாரிகள், டிரைவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், துணைத்தலைவர் செல்வம், வெங்கடேசன், பாஸ்கரன், அமைப்பு நிர்வாகிகள் வக்கீல் சிவநேசன், ஆடிட்டர் செந்தில், வேணுகோபால், பிரவீன், கோவை சுந்தரம் உள்பட ரோட்டரி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.