பெண் ஊராட்சி தலைவர் பதவி நீக்கம் கலெக்டர் நடவடிக்கை

74பார்த்தது
பெண் ஊராட்சி தலைவர் பதவி நீக்கம் கலெக்டர் நடவடிக்கை
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருபவர் கலைச்செல்வி. இவர், ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணியை தனது உறவினர் மூலம் செய்து வந்ததாகவும், அதன்மூலம் பல்வேறு முறைகேட்டில் அவர் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் ஊராட்சியில் நடந்த பணியில் பல்வேறு முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி ஊராட்சி தலைவர் கலைச்செல்வியை பதவி நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் தனது பதவி நீக்கத்தை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கலைச்செல்வி வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின் தீர்ப்பில், ஊரக வளர்ச்சித்துறை அரசு முதன்மை செயலாளர் விசாரணை செய்து 30. 9. 2024-க்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஐகோர்ட்டு தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் முதன்மை செயலாளர், விசாரணை செய்து அதன் இறுதி அறிக்கையை சேலம் மாவட்ட கலெக்டருக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், முறைகேடு புகாரில் சிக்கிய பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வியை ஏற்கனவே பதவி நீக்கம் செய்த உத்தரவை மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி நேற்று உறுதி செய்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி