பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்

73பார்த்தது
பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம்
சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -
குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பினை பதிவு செய்து பிறப்பு சான்றிதழ் பெற பிறப்பு-இறப்பு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெயரின்றி பிறப்பு சான்றிதழ் வைத்திருப்பவர்கள், பெயருடன் பிறப்பு சான்றிதழ் பெற வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். பிறப்பு பதிவு செய்து 15 ஆண்டு முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் உள்ள அனைத்து பிறப்பு பதிவுகளிலும் பெயர் பதிவு செய்திட 5 ஆண்டுகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அக்கால அவகாசம் இந்தாண்டு டிசம்பர் 31-ல் முடிவடைய உள்ளது. குறிப்பாக 31. 12. 2009 தேதி வரை பதிவு செய்யப்பட்ட பிறப்பு பதிவில் 31. 12. 2024 வரை மட்டுமே பெயர் பதிவு மேற்கொள்ள இயலும். எனவே, பெயர் பதிவு தொடர்பாக பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள பகுதியின் பிறப்பு இறப்பு பதிவாளரை அணுகி பெயர் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
சேலம் மாநகராட்சியில் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளில் 15 ஆண்டுகள் முடிவுற்றும் பெயர் பதிவு செய்யாமல் இருப்பின் உரிய ஆவணங்களுடன் ரூ. 200 காலதாமத கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். மாநகராட்சி மைய அலுவலகத்தில் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை நடப்பாண்டு இறுதிக்குள் 31. 12. 2024 பதிவு செய்திடலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி