சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் பழுதடைந்த நீச்சல் குளத்தை சீரமைக்க தமிழக விளையாட்
டு மேம்பாட்டு ஆணையம் ரூ. 18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதற்கு முன்பு முழுமை அடையும் என மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்துள்ளார்.